மேலும் செய்திகள்
ஹிந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி
25-Apr-2025
சூலுார்: பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் சூலுாரில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.காஷ்மீரில் உள்ள பஹல்காம், பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலா பயணிகள், 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சூலுாரில் நடந்தது. பா.ஜ., நிர்வாகிகள் ரவிக்குமார், அசோக், ரவிச்சந்திரன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். இதேபோல், கருமத்தம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு உள்ளிட்ட இடங்களில் பா.ஜ., மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
25-Apr-2025