வெள்ளியங்கிரி கோவிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு
தொண்டாமுத்துார்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, நீண்ட ஆண்டுகளுக்கு பின், அறங்காவலர் குழு நியமித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. புதிய அறங்காவலர் குழு தலைவராக சிவகணேஷ், உறுப்பினர்களாக தர்மலிங்கம், கவிதா, வினோத்குமார், சுதா ஆகியோர் நேற்று பொறுப்பேற்றனர். இவ்விழாவில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தக்கார் (பொ) விஜயலட்சுமி, செயல் அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.