உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்தியம் தலை வணங்காது: கமலுக்கு ஆதரவாக போஸ்டர்

சத்தியம் தலை வணங்காது: கமலுக்கு ஆதரவாக போஸ்டர்

கோவை; 'அன்பை சொன்னதற்கு மன்னிப்பா; சத்தியம் தலை வணங்காது' என, மக்கள் நீதி மய்யம் சார்பில், தமிழகம் முழுதும் அச்சிடப்பட்ட போஸ்டர், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் கமல் நடித்துள்ள, 'தக் லைப்' திரைப்படம், நாளை 5ம் தேதி வெளியாகிறது. சில நாட்களுக்கு முன் இசை வெளியீட்டு விழாவில், 'தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது' என, நடிகர் கமல் தெரிவித்தது, கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.'கமல் மன்னிப்பு கேட்காவிட்டால், திரைப்படத்தை வெளியிட மாட்டோம்' என, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியுள்ளது. தற்போது, ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, விசாரணை நடந்து வருகிறது.இச்சூழலில், 'அன்பு மன்னிப்பு கேட்காது. இருவருக்கும் உள்ள உறவை சொன்னார். அன்பை சொன்னதற்கு மன்னிப்பா? சத்தியம் தலை வணங்காது' என, தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டுஉள்ளன.கட்சியின் ஆதிதிராவிடர் நல அணி மாநில செயலர் சிவா கூறுகையில், ''கன்னட மொழி குறித்து தவறான கருத்தை கூறவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் எதிர்க்கின்றனர். இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மாநிலம் முழுதும், 234 தொகுதிகளின் மாவட்ட செயலர்கள் சார்பில், தொகுதிக்கு, 500 போஸ்டர் வீதம் ஒட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.கட்சியினர் கூறுகையில், 'கமல் படங்களுக்கு இது போல, இதற்கு முன்பும் பல எதிர்ப்புகள் வந்துள்ளன. அவற்றில் எல்லாம் மீண்டு வந்துள்ளார். தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், திரைப்படத்துக்கும், கட்சிக்கும் 'பிரமோஷன்' ஆகவும் இருக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Selliah Ravichandran
ஜூன் 04, 2025 13:17

Tamil ok it's true.but telling person worst and worst in the world


Krishnamoorthy
ஜூன் 04, 2025 10:09

உலகமொழிகளின் தாய் தமிழ் தலைவணங்க கூடாது.


முக்கிய வீடியோ