உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிரியருக்கு சம்பளம் வழங்காமல் அரசியல் ஆதாயம் தேட முயற்சி!

ஆசிரியருக்கு சம்பளம் வழங்காமல் அரசியல் ஆதாயம் தேட முயற்சி!

சென்னை : ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணியாற்றும் 32,500 பேருக்கு சம்பளம் வழங்காமல் அரசியல் ஆதாயம் தேட தி.மு.க., அரசு முயற்சிப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இத்திட்டத்தின் இயக்குனரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்த்திக்கும் கூட சம்பளம் வழங்கப்படவில்லை. இத்திட்டத்திற்காக, 2024- - 25ம் கல்வியாண்டு முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 573 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்காததால் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கல்வித் துறைக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு விதிக்கும் நிபந்தனைகளும், பிடிவாதமும் நியாயமானதல்ல. அதே நேரத்தில், மத்திய அரசின் நிதி வரவில்லை எனக்கூறி சம்பளம் வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது மனிதநேயமற்ற செயல். சம்பளம் வழங்காமல் அவர்களை தவிக்க விட்டிருப்பதை பார்க்கும்போது, இப்பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக, பெரிதுபடுத்தி அரசியல் லாபம் தேடவே, தமிழக அரசு முயற்சிப்பது உறுதியாகிறது.பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால், கல்வித் துறையில் அதை விட பேரவலம் இருக்க முடியாது. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்கான நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும். அதே நேரம், மத்திய அரசு நிதிக்காக காத்திருக்காமல், தமிழக அரசே அவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankar
அக் 03, 2024 13:08

மத்திய அரசின் நிதி சம்பளம் வழங்குவதற்கு இல்லை - டெவெலப்மென்ட் விசயத்துக்கு - தேவை இல்லாமல் முதல்வர் யாரோ எழுதிக்கொடுத்ததை சொல்லிவிட்டு அவதிப்படுகிறார்


K.n. Dhasarathan
அக் 03, 2024 11:10

மத்திய அரசுடன் கூட்டணியில் இருக்கும் மருத்துவர், ராமதாஸ், ஆசிரியர் பிரச்சினையில் ஒன்றிய அரசை வற்புறுத்தி சம்பளம் கிடைக்க வழி செய்தால் நல்லது, அதை விடுத்து, மாநில அரசே ஏதாவது ஏற்பாடு செயுங்கள் என்று சொல்வது ஏன் ? இவராவது லோன் கொடுக்கலாம் , அல்லது ஏற்பாடு செய்யலாம், இதை அரசியல் ஆக்கலாமா ? உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசு அலுவலகம் முன் போராட்டம் நடத்தலாம், அதை விடுத்து, வேற்று அறிக்கை விடுவது மிகுந்த எமாற்றம் தருகிறது .


raja
அக் 03, 2024 09:55

அப்பணின் பெனாவுக்கு சிலை வைக்க மக்களின் வரிபணம் இருக்கு, ஒரு நடிகையின் ஆசையை பூர்த்தி செய்ய கார் பந்தையம் நடத்த மக்களின் வரிபணம் இருக்கு.. உலக சுற்றுலா குடும்பத்துடன் செல்ல மக்களின் வரிப்பணம் இருக்கு ... ஆனால் நாளைய எதிர்கால தூண்களை உருவாக்கும் சிற்பிகளுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை...ஆட்சி செய்ய தெரியலைன்ன ஆட்சியை விட்டுட்டு ஒடுங்கடா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை