உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருவேப்பிலை விவசாயம் விறுவிறுப்பு

கருவேப்பிலை விவசாயம் விறுவிறுப்பு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் கருவேப்பிலை விவசாயம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணார்பாளையம், குருந்தமலை, தேரம்பாளையம், காளட்டியூர், பெள்ளாதி, பெள்ளேபாளையம், மருதூர், கோடதாசனூர், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் கருவேப்பிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.செங்காம்பு ரகம் கருவேப்பிலை மிகுந்த மணமும், மருத்துவக் குணமும் உடையதாக கருதப்படுவதால் இப்பகுதி விவசாயிகள், செங்காம்பு ரக கறிவேப்பிலையை அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர்.மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து கருவேப்பிலை கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் கருவேப்பிலை விவசாயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கஇதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கருவேப்பிலை செடிகள் கோடை காலத்தில் தான் நன்கு செழித்து வளரும். தண்ணீர் அதிகம் தேவைப்படாது. சுமார் 2 மாதங்களுக்கு முன் கருவேப்பிலை அறுவடை செய்யப்பட்ட பின், தற்போது தான் மீண்டும் இலைகள் வர தொடங்கியுள்ளன. களை செடிகளை அகற்றி, தண்ணீர் கட்ட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை