உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாதிப்பெயர் சொல்லி மிரட்டியதாக த.வெ.க. நிர்வாக மீது வழக்கு பதிவு

சாதிப்பெயர் சொல்லி மிரட்டியதாக த.வெ.க. நிர்வாக மீது வழக்கு பதிவு

காரமடை: காளம்பாளையத்தை சேர்ந்த 29 வயது சவுமியா, த.வெ.க.வின் காளம்பாளையம் ஊராட்சி செயலாளராக இருந்து வந்தார். தற்போது அந்த பதவியில் இல்லை. 3 மாதங்களுக்கு முன் காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, 39, இவரை பாலியல் ரீதியாக அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் தூய்மை பணியாளர்களுக்கு த.வெ.க. சார்பில் காளம்பாளையத்தில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு சவுமியாவை அழைக்கவில்லை. சவுமியா ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக, த.வெ.க. கருப்பசாமியின் ஆதரவாளர்களான, சபிதா அவரது கணவர் பாண்டித்துரை உள்ளிட்டோர் சவுமியாவை சந்தித்து சாதி பெயரை சொல்லி திட்டி உள்ளனர். கொலைமிரட்டலும் விடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் சவுமியா புகார் அளித்தார். இதையடுத்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாஸ்கர், காரமடை இன்ஸ்பெக்டர் முருக ராஜா சவுமியாவிடம் விசாரணை செய்து, தவறாக நடந்தது, சாதி பெயரை சொல்லி திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் கருப்பசாமி, சபிதா, பாண்டிதுரை மீது வழக்கு பதிவு செய்தனர். கருப்பசாமி நமது நிருபரிடம், என் மீது சொல்லப்பட்டுள்ள அனைத்து புகார்களும் பொய்யானவை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை