உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டு கதவை உடைத்து திருடிய இருவர் கைது

வீட்டு கதவை உடைத்து திருடிய இருவர் கைது

தொண்டாமுத்தூர்; தீத்திபாளையத்தில் உள்ள வெள்ளியங்கிரி என்பவரின் வீட்டில், கடந்த, 18ம் தேதி, கதவை உடைத்து, 1.20 லட்சம் ரூபாயும், பச்சாபாளையத்தை சேர்ந்த பூவாத்தாள் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த, 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தாலியை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகள் மற்றும் சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சிவானந்தா காலனியை சேர்ந்த சக்திவேல், 29 மற்றும் ரத்தினபுரியை சேர்ந்த விக்கி என்கிற சிவபாலன் ஆகிய இருவரும், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. புட்டு விக்கி பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும், தனிப்படை போலீசார் கைது செய்தனர். 1.50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை