மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் சமையல் மாஸ்டர் கொலை
11-Mar-2025
போதை விற்ற இருவர் கைது
05-Mar-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே கோபாலபுரத்தில், அரசு பஸ்சில் லாட்டரி சீட்டுகளுடன் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கேரளாவை ஒட்டிய பொள்ளாச்சி அருகே உள்ள கிராமங்களில், தொழிலாளர்களை மையப்படுத்தி சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, பொள்ளாச்சி தாலுகா போலீசார் கோபாலபுரம் சோதனைச் சாவடியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு பஸ்சில், இருவர், விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை கொண்டு செல்வது கண்டறியப்பட்டது.அவர்களிடம் சோதனை நடத்தியதில், 146 லாட்டரி சீட்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள், திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஜெயராமன், 65, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், 51, என்பதும் தெரிந்தது.
11-Mar-2025
05-Mar-2025