புகையிலை பொருட்கள் பதுக்கிய இருவர் கைது
ஆனைமலை,; ஆனைமலை அருகே, 3 கிலோ புகையிலை பொருட்களை கோட்டூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆனைமலை அருகே கோட்டூரில், போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என ஆய்வு செய்தனர்.அப்போது, மளிகை கடை அருகே சந்தேகப்படும் படி நின்ற இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அதில், துாத்துக்குடியை சேர்ந்த செல்வகபிலர்,24, சமத்துார் ராம் காலனி மரியஉதய செல்வகுமார்,46, என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், 3.432 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.