உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா விற்ற இருவர் கைது 

கஞ்சா விற்ற இருவர் கைது 

கோவை; காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காந்திபுரம், முதலாவது வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதி அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த, நபரை பிடித்து விசாரித்தனர். அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் காந்தி மாநகர், காவலர் குடியிருப்பை சேர்ந்த வினோத் குமார், 28 என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை, பறிமுதல் செய்து கைது செய்தனர். இதேபோல், செல்வபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. செல்வபுரம் போலீசார் செல்வ சிந்தாமணி குளம் அருகில் உள்ள பொது கழிப்பிடம் அருகில் இருந்த செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மணிகண்டனிடம் சோதனை செய்த போது, 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 2,600 பணம் இருந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும், போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை