மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்
31-May-2025
கோவை; கோவை உக்கடம் போலீசாருக்கு, உக்கடம் ஈஸ்வரன் கோவில் வீதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அதில் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. விற்பனையில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த ஜான் அபிலேஷ், 40 என்பவரை சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 159 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், சிங்காநல்லுார் போலீசார் நடத்திய சோதனையில் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட எ.ஜி.புதுாரை சேர்ந்த ராஜசேகரன், 45 என்பவரை கைது செய்தனர்.
31-May-2025