உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 125 கிலோ புகையிலை பறிமுதல் சூலுாரில் இருவர் அதிரடி கைது

125 கிலோ புகையிலை பறிமுதல் சூலுாரில் இருவர் அதிரடி கைது

சூலுார், ;சூலுார் அருகே 125 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்சூலுார் அடுத்த புது காலனி பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, சூலுார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சோதனை செய்ததில், காரில், 125 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த புதுகாலனியை சேர்ந்த ரவி, 52, காமாட்சி புரத்தை சேர்ந்த வில்லியம் தங்கராஜ், 43 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி