மால் ஊழியர்கள் மீது தாக்குதல் இருவர் மீது வழக்கு
கோவை: சிட்ரா பகுதியில் உள்ள மாலில் ஊழியரை தாக்கிய இருவர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கோவை, நீலிக்கோணாம்பாளையம், அண்ணாநகரை சேர்ந்தவர் ரங்கநாதன், 27. இவர் அவிநாசி ரோடு சிட்ரா அருகில் உள்ள மாலில் பார்க்கிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 28ம் தேதி இவர் இரவு பணியில் மாலில் இருந்தார்.அப்போது, பார்க்கிங் பகுதியில் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது ஒரு பெண் உட்பட மூவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து வெளியில் சென்று பேசுங்கள் என ரங்கநாதன் கூறினார்.அப்போது அவர்கள், வெளியே செல்ல மறுத்து, ரங்கநாதனுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் ரங்கநாதனை தாக்கினர். இதில் அவரின் காது, முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் போலீசார் மால் ஊழியரை தாக்கிய ஸ்ரீநிவாசன், முஸ்தபா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.