உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்சாரம் தாக்கி இரு யானைகள் பலி

மின்சாரம் தாக்கி இரு யானைகள் பலி

பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட உமாண்டிமலை வனப்பகுதியில், பருத்தியூர் அருகே வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து, ஒரு கி.மீ., துாரத்தில், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மேட்டு பகுதியில் இருந்து, தாழ்வான நிலத்தடி பகுதிக்கு கடந்து வரும் வழியில், இரு பெண் யானைகள், மின்சாரம் தாக்கி, இறந்திருப்பதைக் கண்டறிந்தனர்.இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் பார்க்கவதேஜா தலைமையிலான வனக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உதவி வனக்கால்நடை மருத்துவ அலுவலர், இறந்த யானைகளுக்கு பிரேதப்பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விசாரணையில், விவசாய கிணற்றுக்கு செல்லக் கூடிய தாழ்வழுத்த மின்கம்பியால், எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கி யானைகள் இறந்திருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ