இரு காதலி... யாருக்கு தாலி... தவித்த இளைஞர் தற்கொலை
கோவை: ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து வந்தது வெளியே தெரிந்ததால், குற்ற உணர்வில் இளைஞர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேம் குமார், 30; எலக்டிரீசியன். கோவை சீரநாயக்கன்பாளையத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.இவரும் மதுரையை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கோவையை சேர்ந்த மற்றொரு பெண்ணுடனும், பிரேம்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, ஒருவருக்கு ஒருவர் தெரியாமல், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களையும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மதுரையில் உள்ள காதலிக்கு, பிரேம் குமார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, விசாரித்ததில் பிரேம் குமாரின் மற்றொரு காதல் பற்றி தெரியவந்தது. இது குறித்து கோவையில் உள்ள காதலிக்கும், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தை இரண்டு பெண்களும், பிரேம் குமாரிடம் கேட்டுள்ளனர். குற்ற உணர்வுக்கு ஆளான பிரேம் குமார், தான் தங்கியிருந்த வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.