உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையிலைப் பொருட்கள் கடத்திய இருவருக்கு சிறை

புகையிலைப் பொருட்கள் கடத்திய இருவருக்கு சிறை

கோவை; புகையிலைப் பொருட்களை கடத்திய இருவரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை வடவள்ளி போலீசார், வீரகேரளம் - தொண்டாமுத்துார் ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முறையாக தகவல் தெரிவிக்காததால், அவர்களை சோதனை செய்தனர்.சோதனையில் அவர்கள் மொபட்டில், குட்கா, பான்பராக் ஆகியவற்றை மறைத்து கடத்திச் செல்வது தெரிந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், மனோஜ்குமார், 25, ரெனிஸ், 19 என தெரிந்தது. குட்கா, பான்பராக் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 30 பாக்கெட் புகையிலைப் பொருட்கள், ரூ.17 ஆயிரம், மொபட், மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ