உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கையும் களவுமாக சிக்கிய இரு திருடர்களுக்கு சிறை

கையும் களவுமாக சிக்கிய இரு திருடர்களுக்கு சிறை

கோவை; இருவேறு இடங்களில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றிய இருவரை, மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.நீலகிரி, வினோபாஜி நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 34; ஆராய்ச்சி மாணவர். பாரதியார் பல்கலை விடுதியில் தங்கி படித்து வருகிறார். நேற்று முன்தினம், மணிகண்டன் கேன்டீன் சென்று தனது அறைக்கு திரும்பிய போது, தனது அறையில் இருந்து ஒருவர், லேப்டாப்பை எடுத்துக்கொண்டு ஓடுவதை பார்த்தார். சக மாணவர்களின் உதவியுடன், அந்த நபரை மடக்கி பிடித்து, வடவள்ளி போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில் அவர் சேலம், மேட்டூரை சேர்ந்த கார்த்திக், 45 என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்

* சின்னவேடம்பட்டியை சேர்ந்த, தனுஷ்கோடி, 32 என்பருக்கு அத்திப்பாளையம் பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம், தனுஷ்கோடியின் தோட்டத்துக்கு அருகில் இருக்கும் ஒருவர் தனுஷ்கோடியை அழைத்து, அவரது தோட்டத்தில் யாரோ இருப்பதாக தெரிவித்தார். தனுஷ்கோடி சென்று பார்த்தார். அப்போது மோட்டர் அறையில் வாலிபர் ஒருவர், மோட்டாரை திருட முயற்சி செய்து கொண்டு இருந்தார். அவரை கையும், களவுமாக பிடித்து சரவணம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் கணபதியை சேர்ந்த இமானுவேல், 22 என்பதும் அவ்வப்போது இது போன்ற சிறு, சிறு திருட்டுக்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை