உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு சக்கர வாகனம் திருடியவர் கைது

இரு சக்கர வாகனம் திருடியவர் கைது

சூலுார்; சூலுாரில் இரு சக்கர வாகனத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சூலுார் மருத தேவர் சந்தை சேர்ந்தவர் வனிதா, 37. இவர் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்ல வேண்டி, தனது நிறுவனத்துக்கு சொந்தமான வாகனத்தை எடுத்து வீட்டுக்கு வந்திருந்தார். திருமணத்துக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சூலுார் போலீசில் அவர் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், வண்டியை திருடிய நபரை தேடி கண்டுபிடித்து ஸ்கூட்டியை மீட்டனர். விசாரணையில் அந்நபர் ஒரத்தநாட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியம், 28 என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை