உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுமாடு தாக்கியதில் இரு தொழிலாளர்கள் காயம்

காட்டுமாடு தாக்கியதில் இரு தொழிலாளர்கள் காயம்

வால்பாறை; தேயிலை பறித்துக்கொண்டிருந்த இரு தொழிலாளர்கள், காட்டுமாடு தாக்கியதில் படுகாயமடைந்தனர்.வால்பாறை அடுத்துள்ளது, முத்துமுடி எஸ்டேட் மூன்றாம் டிவிஷன். இங்குள்ள 25ம் நெம்பர் தேயிலை காட்டில் நேற்று தொழிலாளர்கள் வழக்கம் போல் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.மதியம், 2:20 மணிக்கு வனப்பகுதியிலிருந்து வந்த காட்டுமாடு, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குனியாலி, 72, அசிதா,19, ஆகிய இருவரையும் தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர் விசாரித்து, காயமடைந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து தலா, ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத்தொகையாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை