உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூட்டிய வீட்டில் திருட்டு இரு வாலிபர்கள் கைது

பூட்டிய வீட்டில் திருட்டு இரு வாலிபர்கள் கைது

வால்பாறை, : வால்பாறை அருகே, பூட்டிய வீட்டில் திருடிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட்டில் தோட்ட அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ரவிசாம்சன். இவர், கடந்த மாதம் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்று, கடந்த, 11ம் தேதி நடுமலையில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த மொபைல்போன் மற்றும் டார்ச் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி, வால்பாறை போலீசில் புகார் கொடுத்தார்.இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நடுமலை எஸ்டேட்டை சேர்ந்த குகநாதன்,18, பன்னிமேடு எஸ்டேட்டை சேர்ந்த ஸ்ரீராம்,19, ஆகியோர் வீடு புகுந்து பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ