உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாதாள சாக்கடை குழாய் பதிக்க திட்டம்

 பாதாள சாக்கடை குழாய் பதிக்க திட்டம்

கோவை: மாநகராட்சி பகுதியில் குறிச்சி, குனியமுத்துார், வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலுார், வெள்ளக்கிணறு, சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையத்தை, அதன் முழு திறனுக்கு செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், அம்ரூத் 2.0 திட்டத்தில், ரூ.179.28 கோடியில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்படுகிறது. 30 ஆயிரத்து 128 வீட்டு இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில், சில இடங்களில், இன்னும் குழாய் இணைப்பு வழங்க வேண்டியிருக்கிறது. அவிநாசி ரோட்டில் பன் மால் மற்றும் நவ இந்தியா பகுதிகளில், ரோட்டின் குறுக்காக குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும். இதேபோல், அவிநாசி ரோட்டில் 300 மீட்டர் துாரத்துக்கு மெயின் ரோட்டில் குழாய் பதிக்க வேண்டியிருக்கிறது. ரோட்டை தோண்டாமல் துளையிட்டு குழாய் பதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பாதாள சாக்கடை பிரதான குழாய் இணைப்பு வழங்கி வருகிறோம். அவிநாசி ரோட்டின் குறுக்கே மூன்று இடங்களில் குழாய் பதிக்க வேண்டும். மீதமுள்ள இரு இடங்களில் வேலை செய்ய வேண்டும். இவ்விரு பகுதிகளிலும் வேலை முடிந்தால் 15 ஆயிரம் இணைப்பு வழங்க முடியும். இரு இடங்களில் தண்டவாளத்தை கடந்து, பாதாள சாக்கடை குழாய் கொண்டு செல்ல, ரயில்வே அனுமதி பெற வேண்டியிருக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி