உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாய்பாபா காலனி பாலம் பணியில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு

சாய்பாபா காலனி பாலம் பணியில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், சாய்பாபா காலனியில் மேம்பாலம் கட்டுமான பணியின்போது, பாதாள சாக்கடை குழாய் நேற்று உடைந்தது.கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், சாய்பாபா காலனியில் துவங்கி, பஸ் ஸ்டாண்ட் வரை, 1,140 மீட்டர் நீளத்துக்கு, ரூ.52.90 கோடியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது.முதலில், பஸ் ஸ்டாண்ட் எதிரே துளையிட்டு, துாண்கள் எழுப்பப்பட்டன. அப்போது, குடிநீர் குழாய் உடைக்கப்பட்டது. உடனடியாக, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, வேறொரு குழாய் மூலமாக, குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.இதுவரை, 12 துாண்களுக்கு துளையிடப்பட்டு, எழுப்பப்பட்டு உள்ளன. சாய்பாபா காலனியில் துாண்களுக்கு துளையிடும் பணி, இரு நாட்களாக நடந்து வருகிறது. நேற்றைய தினம், பொக்லைன் இயந்திரங்களால் தோண்டிய போது, பாதாள சாக்கடை குழாய் உடைந்தது.கழிவு நீர் வெளியேறியதால், பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.குழாய் உடைப்பு சம்பந்தமாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ