உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மறக்க முடியாத துள்ளித்திரிந்த பள்ளி காலம் கிக்கானி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மறக்க முடியாத துள்ளித்திரிந்த பள்ளி காலம் கிக்கானி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை: கோவை கிக்கானி மேல் நிலைப்பள்ளியில், 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். தங்கள் பள்ளியில் பயின்ற அந்த கால மலரும் நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்களில் ஒருவரான கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர் ராஜசேகரன் கூறியதாவது: நாங்கள் எல்லாம், 1974ம் ஆண்டு படித்த மாணவர்கள். இது எங்களுக்கு பொன்விழா ஆண்டு. கிக்கானி பள்ளியில் படித்த நாட்களை எங்களால் மறக்க முடியாது. மாணவர் பருவத்தில் பள்ளி வளாகத்தில் துள்ளித்திரிந்த அந்த காலம் நினைக்கு வருகிறது.இந்த பள்ளியை பொறுத்தவரை ஒழுக்கம் ரொம்ப முக்கியம். சுவாமி நாதன் என்ற தலைமை ஆசிரியர் இருந்தார். அவரை கண்டாலே எங்களுக்கு பயம். அவ்வளவு கண்டிப்பாக இருப்பார். இன்றைக்கும் கிக்கானி பள்ளி சிறப்பாக இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகதான் சந்திக்கிறோம். இந்த பேஜ்சில் படித்த எல்லோரும் இன்றைக்கு நல்ல நிலையில் உள்ளனர். அதனால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். கடந்த ஆண்டு கம்ப்யூட்டர் லேப் 16 லட்சம் செலவில் வைத்து கொடுத்தோம். இந்த ஆண்டு இயற்பியல் லேப்பை புதுப்பித்து கொடுக்க இருக்கிறோம். பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற ஆறு மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் விருதுகள் வழங்கி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை