உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  யூனியன் வங்கி ஊழியர்கள் சங்க வெள்ளி விழா மாநாடு

 யூனியன் வங்கி ஊழியர்கள் சங்க வெள்ளி விழா மாநாடு

சூலூர்: காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, யூனியன் வங்கி ஊழியர்கள் சங்க வெள்ளி விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யூனியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின், 25வது வெள்ளி விழா ஒட்டி இரண்டு நாள் மாநாடு, சின்னியம் பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் துவங்கியது. தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அருணாசலம் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், ''மத்திய அரசு, தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல், 29 தொழிலாளர் நல சட்டங்களை இணைத்து நான்கு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பை கொண்டுவந்துள்ளது. அந்த தொகுப்பை கொண்டு வந்த நவ., 29 ம்தேதி ஒரு கருப்பு நாள் ஆகும். தனியார் அவுட்சோர்சிங் முறையை ஒழிக்க வேண்டும். வங்கிகளில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களால், வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை கிடைப்பதில்லை. காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். பொதுத்துறை வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன. அவற்றை இணைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அவுட் சோர்சிங் முறையை ஒழிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன சங்கத்தின் மாநில தலைவர் தாமரை செல்வன் தலைமை வகித்தார். அகில இந்திய சங்க பொதுச் செயலாளர் சங்கர், கோவை மண்டல பொது மேலாளர் ராஜ்குமார், ஸ்ரீதர், சையத் இப்ராஹிம், முரளி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை