உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன்றிய சேர்மன் வாகனங்கள் இனி இன்ஜினியர்கள் வசம்

ஒன்றிய சேர்மன் வாகனங்கள் இனி இன்ஜினியர்கள் வசம்

அன்னுார்; ஊராட்சி ஒன்றிய சேர்மனுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை பொறியாளர்கள் பயன்படுத்தி கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றிய சேர்மனுக்கு, அரசால் கார்கள் வழங்கப்பட்டு, ஒன்றிய சேர்மன்கள் அவற்றை பயன்படுத்தி வந்தனர். கடந்த 5ம் தேதி ஒன்றிய சேர்மன் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து, அந்த வாகனங்கள் ஒன்றிய அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் பொன்னையா, நேற்று முன்தினம் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 27 மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி பணிகளை மேற்கொள்ள, கடந்த 6ம் தேதி முதல் வரும் ஜூலை 5ம் தேதி வரை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய சேர்மன்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள், பணிகளை மேற்பார்வையிட பயன்படுத்திக் கொள்ளலாம்.மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் வைத்து, உதவி திட்ட அலுவலர்கள் மேற்பார்வையிடும் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை