உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன்றிய குழு கூட்டம்; 13 தீர்மானங்கள் பாஸ்

ஒன்றிய குழு கூட்டம்; 13 தீர்மானங்கள் பாஸ்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில், நேற்று ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் நாகராணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரவு செலவின கணக்குகள் படிக்கப்பட்டது. தொடர்ந்து, நிலுவையில் உள்ள பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். எனவே, ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை முடிக்க ஒன்றிய கவுன்சிலர்கள் வலியுறுத்த வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது.மழையால், சில பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதை தக்க நேரத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தெரிவிக்கப்பட்டது.ஒன்றிய அலுவலகத்தில் கணினி பயன்பாடு அதிகரிப்பால், புதிதாக, 6 கணினி தேவைப்படுகிறது. இதில், ரெகுலர் பிரிவுக்கு 3 மற்றும் திட்டபிரிவுக்கு 3 கணினியும் தேவைப்படுகிறது. இதை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சிலர்களிடம், ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ