| ADDED : நவ 16, 2025 12:50 AM
கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், 31வது பட்டமளிப்பு விழா நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசுகையில், ''கல்வி என்பது நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் பயன் தருவது என்பதை, மாணவிகள் மனதில் கொள்ள வேண்டும். சமூகத்தில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவக்கூடிய, உயர்கல்வி மற்றும் ஆய்வுகளில் மாணவிகள் ஈடுபட வேண்டும்,'' என்றார். இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில், 503 பேருக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இரண்டு தங்கப்பதக்கம் உட்பட பல்கலை அளவில் 13 சிறப்பிடங்களைக் பெற்ற மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். முதல்வர் சித்ரா, பட்டம் பெற்ற மாணவிகள் அனைவரையும் பாராட்டி வாழ்த்தினார்.