மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்
20-Jun-2025
கோவை; விவசாயிகள் தங்கள் தோட்ட பயன்பாடுகளுக்கு பகல் நேரத்தில் மின்மோட்டார்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் பொதுவாக விடியற்காலையிலும், மாலையிலும் மின்மோட்டார்களை வேளாண் செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். பகலில் இலவசமாக கிடைக்கும், புதுப்பிக்ககூடிய, இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்துவதால், பல்வேறு பயன்கள் உள்ளன. இதனால், பசுமை ஆற்றலை ஊக்குவிப்பதோடு, பிற வளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பொருளாதார செலவினங்கள், மாசு கட்டுப்படுத்தப்படுகிறது.விவசாயிகள் பகல் நேரத்தில் கிடைக்கும், சூரிய மின்ஆற்றலை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மின்மோட்டார்களை பகல் பொழுதில் உபயோகப்படுத்துவது பலனை தரும். இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20-Jun-2025