குப்பையிலிருந்து பயனுள்ள பொருள்; மாணவ-மாணவியருக்கான போட்டி
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே இடிகரையில் உள்ள கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளியில், 'குப்பையில் இருந்து செல்வம்' என்ற தலைப்பில் கோவை சகோதயாவின் சார்பில் போட்டி நடந்தது. இதில், மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு பண்பை வளர்ப்பதற்கான நோக்கில் நடந்தது. இதில், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள, 60க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், அன்றாட வாழ்வில் கைவிடப்பட்ட பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள சாதனங்களாகவும், கலை பொருள்களாகவும், மாற்றி மாணவர்கள் படைப்புகளை பார்வைக்கு வைத்து இருந்தனர். கிரேயான்ஸ் பள்ளி தலைவர் தினேஷ்குமார் பேசுகையில், 'இப்போட்டி வெறும் போட்டி அல்ல. நிலைத்த வளர்ச் சியை நோக்கிய ஒரு முன்னெடுப்பாகும். சிறிய முயற்சிகளும், பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்பதை குழந்தைகள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்பட்டன.