உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூகுள் எக்ஸ்டெண்டட் தொழில்நுட்ப பயிலரங்கு

கூகுள் எக்ஸ்டெண்டட் தொழில்நுட்ப பயிலரங்கு

கோவை: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் கூகுள் டெவலப்பர் குழுமம் கோவையுடன் இணைந்து 'கூகுள் ஐ/ஒ., எக்ஸ்டெண்டட் கோவை' என்ற நிகழ்ச்சியை நடத்தியது. அடாப்ட்.ஐ.ஒ., நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தொழில்நுட்பத் தலைவர் கவுதம் மற்றும் திசக்ஸ் (THISUX) நிறுவனத்தின் நிறுவனர் சஞ்சு சிவலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அவர்கள் கூகுள் ஐ/ஒ., 2026ல் அறிமுகமான புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கினர். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ஜெமினி , நவீன ஆண்ட்ராய்டு செயலி மேம்பாடு, கிளவுட் தொழில்நுட்பங்கள் மற்றும் சமீபத்திய டெவலப்பர் கருவிகள் குறித்து பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். மாணவர்கள், சாப்ட்வேர் டெவலப்பர்ஸ், கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !