உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாய்களுக்கு இன்று தடுப்பூசி முகாம்

நாய்களுக்கு இன்று தடுப்பூசி முகாம்

அன்னுார், ; நாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று அன்னுாரில் நடக்கிறது. அன்னுார் வட்டாரத்தில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. தெருக்களில், முதியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளை துரத்தி அச்சுறுத்துகிறது, அன்னுார் அரசு மருத்துவமனைக்கு தினமும் நாய்க்கடிக்காக சிகிச்சை பெற வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள், பேரூராட்சி அலுவலகத்திலும், கோவை மாவட்ட நிர்வாகத்திலும், பலமுறை புகார் தெரிவித்தனர். இதையடுத்து தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. அன்னுார் கோவை சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.கால்நடை பராமரிப்பு துறையும் அன்னுார் பேரூராட்சி அலுவலகம் இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி