உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹஜ் யாத்திரை செல்வோருக்கு தடுப்பூசி

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு தடுப்பூசி

கோவை: கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு, மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து செலுத்தப்பட உள்ளது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.இம்முகாம் நாளையும் (ஏப்., 28), நாளை மறுதினமும் (ஏப்., 29) நடைபெற இருக்கிறது. கோவை மாவட்டத்தில் இருந்து செல்லும் ஹஜ் யாத்ரீகர்களில், 138 பேருக்கு, 28ம் தேதியும், 137 பேருக்கு 29ம் தேதியும் தடுப்பூசி செலுத்தப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி