உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலேசியாவில் வள்ளி - கும்மி; அன்னுார் பெண்கள் அசத்தல்

மலேசியாவில் வள்ளி - கும்மி; அன்னுார் பெண்கள் அசத்தல்

அன்னுார்; அன்னுார் பகுதியைச் சேர்ந்த பெண்கள், மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அன்னுார் வட்டாரத்தில், கிராமப்புறங்களில், சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர், வள்ளி கும்மியாட்டம் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி முடித்தவர்களின் அரங்கேற்றம் கோவில் வளாகங்களில் நடத்தப்படுகிறது. இதில் திருக்குறள் கும்மியை அறிமுகப்படுத்திய வள்ளி முருகன் கலைக்குழு சார்பில், பெண்கள், ஆண்கள் என, 50 பேர் கடந்த வாரம் மலேசியா சென்றனர். மலேசியாவில் உள்ள பத்து குகை முருகன் கோவில் முன் நடந்த கலை நிகழ்ச்சியில், திருக்குறள் பாடலுக்கு ஏற்ப, பல்லடம் பயிற்சி ஆசிரியர் பழனிசாமி தலைமையில், நளினமாக ஆடி, பார்வையாளர்களை பரவசப்பட வைத்தனர். இந்நிகழ்ச்சியில், இணை ஆசிரியர்கள் ரங்கநாதன், தயாநிதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை