50 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்
வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள முடீஸ் பகுதியிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, சரக்கு வேன் வந்தது. கனமழை பெய்த நிலையில், சோலையாறு குருவம்பாடி வளைவில் எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடும் போது, கட்டுப்பாட்டை இழந்த வேன், 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், வேனை ஓட்டிய டிரைவர் சின்னத்துரை, 30, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். நேற்று காலை கிரேன் வாயிலாக தேயிலை எஸ்டேட்டில் பாய்ந்த வேன் மீட்கப்பட்டது. வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.