உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த அமைச்சரிடம் வானதி வலியுறுத்தல்  

ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த அமைச்சரிடம் வானதி வலியுறுத்தல்  

கோவை, ; கோவை ரயில்வே ஸ்டேஷனில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தக்கோரி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் சந்தித்து முறையிட்டார்.அப்போது, அவர் கொடுத்த மனு:தெற்கு ரயில்வேயில் வருவாய் ஈட்டும் முக்கியமான கோவை ரயில்வே ஸ்டேஷனில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். கோவையில் இருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர் ரயில் சேவையை பொள்ளாச்சி வரை நீட்டிப்பது; ஈரோட்டில் இருந்து கோவை - பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை துவக்குதல்; கோவை-பொள்ளாச்சி விரைவு ரயில் சேவையை மதுரை வரை நீட்டித்தல்.திருவனந்தபுரம் - கோவை இடையே எர்ணாகுளம், பாலக்காடு வழியாக புதிய வந்தே பாரத் ரயில் இயக்குதல், நாகர்கோவில்-கோவை, நாகர்கோவில்-பழனி இடையே ஜனசதாப்தி ரயில் சேவையை துவக்க வேண்டும். கோவையின் மக்கள் தொகை, 35 லட்சத்தை கடந்து விட்டதால், அதற்கேற்ப வடகோவை, கோவை, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த வேண்டும். போத்தனுார் சந்திப்பில் ஏ.பி.எஸ்.எஸ்., திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணி தாமதமாவதால், பிட் லைன்கள் மற்றும் ஸ்டேபிளிங் லைன்களை விரைந்து அமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை