உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

அன்னுார்: மத்திரெட்டிபாளையத்தில் பழமையான ஏண்டம்மா வரதராஜ பெருமாள் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 6ம் தேதி காலை திருவிளக்கு பூஜையுடன் துவங்குகிறது. மதியம் கோவிலுக்கு முளைப்பாலிகை எடுத்து வரும் ஊர்வலம் நடக்கிறது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது.வருகிற 7ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், மதியம் எண் வகை மருந்து சாத்துதலும், மாலையில் சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.வரும் 8ம் தேதி காலை 7:30 மணிக்கு மூலவர், பரிவார தெய்வங்கள் மற்றும் விமான கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து தச தரிசனம், மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ