மேலும் செய்திகள்
பட்டத்தரசி அம்மன் பூச்சாட்டு திருவிழா
22-May-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி தேர்த்திருவிழா நடந்தது.கடந்த, 23ம் தேதி விநாயகர் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தன.நாயக்கனுாரில் இருந்து பூ கம்பம் கோவில் வந்தடைதல், படைக்கல பூஜை, அம்மனுக்கு திருவாபரணம் எடுத்தல், பூ கம்பம் நடுதல், மூலமூர்த்தி, பரிவார மூர்த்திகளுக்கு திருகாப்பு அணிவித்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து, கோவிலில் பூவோடு எடுத்தல், காலை, மாலை மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. சக்தி கரகம் தீர்த்த கிணற்றிலிருந்து புறப்படுதல், கோவில் வந்தடைதல், அம்மன் அழைப்பு, அலங்கார பூஜை, பொங்கல், மாவிளக்கு, அலகு குத்தி தேர் இழுத்தல், பூ கம்பம் அகற்றி கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
22-May-2025