உள்ளூர் செய்திகள்

வாகனங்கள் ஏலம்

கோவை:கோவை மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு பைக் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. 14ம் தேதி காலை 10 மணிக்கு, கோவை அவிநாசி ரோட்டிலுள்ள பி.ஆர்.எஸ்., மைதானத்தில் ஏலம் நடத்தப்படும். ஏலம் எடுக்க விரும்புவோர், முன்கூட்டியே வாகனங்களை பார்வையிட, 10ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனத்துக்கு 5,000 ரூபாய், பைக்கிற்கு 1,000 ரூபாய் முன் தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஏலம் எடுக்கும் தொகைக்கு, ஜி.எஸ்.டி., தனியாக செலுத்த வேண்டும், என, மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை