மேலும் செய்திகள்
அ.தி.மு.க., சார்பில் அன்னதானம்
17-May-2025
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் மேற்கு நகர் ஹிந்து முன்னணி சார்பில், வேல் பூஜை மற்றும் நகர பொது குழு கூட்டம் நடந்தது.மதுரையில் ஜூன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், வேல் பூஜை குறித்து இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் வேல் பூஜை நடந்தது.கூட்டத்துக்கு ஹிந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். நகர தலைவர் தேவன் வரவேற்றார். மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், கல்லாறு அகத்தியர் ஞானபீடம் மாதாஜி சரோஜினி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேடையில் வேலுக்கு அலங்காரம் செய்து வைத்து, பூஜை செய்தனர். பின்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பங்களா மேடு ராஜ மகாசக்தி வள்ளி கும்மி குழுவினரின், வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
17-May-2025