உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அமைச்சர் பொன்முடி மீது வி.எச்.பி., போலீசில் புகார்

அமைச்சர் பொன்முடி மீது வி.எச்.பி., போலீசில் புகார்

கோவை; பெண்கள் குறித்தும், ஹிந்து மதம் குறித்தும் அவதூறு பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னையில் நடந்த தி.க., கூட்டத்தில், தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, பெண்களை கொச்சையாக விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ரத்தினபுரி போலீசில் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழ்நாட்டின் தர்ம யாத்ரா பொறுப்பாளர் சிவலிங்கம் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 6ம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில், தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, ஹிந்து மதத்தை குறித்தும், ஹிந்து மதத்தில் இருக்கும் நம்பிக்கைகள் குறித்தும் மோசமாக சுட்டிக்காட்டியும், சமூக ஒற்றுமையை உடைக்கும் வகையிலும், வெறுப்பு உரையை ஊக்குவிக்கும் சொற்களை கூறியுள்ளார். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் அளித்துள்ளது. எனவே, பெண்கள் குறித்தும், ஹிந்து மதம் குறித்தும் அவதுாறு பேசிய, அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ