துணை ஜனாதிபதி நாளை கோவை வருகை
கோவை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை மாலை 5.55 மணிக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் கோவை வருகிறார். தொடர்ந்து காரில், அன்னுார் ஒன்னி பாளையத்தில் உள்ள, ஸ்ரீ எல்லை கருப்பராயன் கோயிலுக்கு செல்கிறார். சுவாமி தரிசனத்துக்கு பின், இரவு 7.35 மணிக்கு விமானத்தில் சட்டீஸ்கர் செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.