உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஜய் அரசியல் நாகரிகம் தெரியாதவர்: நடிகர் ரஞ்சித்

விஜய் அரசியல் நாகரிகம் தெரியாதவர்: நடிகர் ரஞ்சித்

பெ.நா.பாளையம்: நடிகர் விஜய் அரசியல் நாகரிகம் தெரியாதவர் என, நடிகர் ரஞ்சித் பேசினார். கோவை மாவட்டம், துடியலூரில் வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில், நடிகர் ரஞ்சித், பேசுகையில், நடிகர் விஜய் மதுரை மாநாட்டில் பேசினார். அப்போது, நான் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்தவன். பிழைப்பை தேடி அரசியலுக்கு வரவில்லை என, பேசினார். அவர் எம்.ஜி.ஆரை சொன்னாரா, மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதாவை சொன்னாரா அல்லது விஜயகாந்தை சொன்னாரா. நேரடியாக சொல்ல கூச்சப்பட்டு கொண்டு, ஒருவேளை அவர் நடிகர் கமல்ஹாசனை தான் சொல்லி இருப்பார் என, நினைக்கிறேன். அதற்கு பொருத்தமான நபர் கமல்ஹாசன் தான். நடிகர் விஜய், 'தலைவா' என்ற அவருடைய படத்தை வெளியிட முடியாமல் தவித்த போது, 2014ம் ஆண்டு கோவை கொடிசியாவில் கையை கட்டிக்கொண்டு மோடிஜியை பார்க்க காத்திருந்தார். விஐய் அதை மறந்து விட்டார். ஒரு குடிமகனாக எனக்கு அப்பா யார் என்றால், அது மோடி ஜி தான். இன்று அமெரிக்கா மட்டுமல்லாமல், உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கக்கூடிய ஒரே தலைவர் மோடி ஜி. மதுரை மாநாட்டில் பேசிய விஜய், உனக்கு அறிவு இல்லை. தமிழக முதல்வரை அங்கிள் என்கிறாய். மிஸ்டர் மோடி என, கையை சொடக்கு போட்டு கூப்பிடுகிறாய். இதுதான் உன்னுடைய அரசியல் நாகரிகமா. நீயே இப்படி இருந்தால் உன்னை நம்பி வந்திருக்கும் பிள்ளைகளின் நிலைமை என்னாவது. எனக்கு வரும் கோபத்துக்கு ஒரே குத்து. அதை வாக்குச்சீட்டில் குத்துவோம். இவ்வாறு, நடிகர் ரஞ்சித் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி