மேலும் செய்திகள்
ஒரு லட்சம் ரூபாய்க்குள் வருமான சான்று கொடுங்க!
04-Jun-2025
கோவை; கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவையின், கோவை கோட்ட அமைப்பாளர் கோவிந்தராஜன், கோவை கலெக்டரிடம் கொடுத்த மனு:இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத, கிராமக்கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளை, கிராமக்கோவில் பூசாரிகள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டுமென்றால், ஆண்டு வருவாய் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.நலவாரியத்தில் புதியதாக பதிவு செய்ய, பூசாரிகள் சம்மந்தப்பட்ட கிராமநிர்வாக அலுவலர் மற்றும் வட்டார வருவாய் அலுவலரிடம், வருமான சான்றிதழ் பெற விண்ணப்பித்தால், ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக காண்பித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்குகிறார்கள்.இதனால் பூசாரிகள் பலர், நலவாரியத்தில் பதிவு செய்ய முடிவதில்லை. ஆகவே பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்ய, ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமான சான்று வழங்க, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
04-Jun-2025