உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சிலை அமைப்பால் பரபரப்பு

விநாயகர் சிலை அமைப்பால் பரபரப்பு

போத்தனுார் : போத்தனுாரிலிருந்து வெள்ளலூர் செல்லும் வழியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதனருகே அரசுக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, இங்கு, ஹிந்து முன்னணியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி பாலு, ஒன்றரை அடி உயர விநாயகர் சிலையை வைத்தார். வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சென்று, சிலையை அகற்ற அறிவுறுத்தினர். ஹிந்து அமைப்பினர், கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., துணை தலைவர் முரளி மற்றும் சிலர் அங்கு வந்தனர். போலீஸ் உதவி கமிஷனர் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினார். தொடர்ந்து பாலுவிடம் பேசியதையடுத்து சிலை அகற்றப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் மூன்று மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ