உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐந்து விக்கெட் வீழ்த்தி வீரர் வினோத் அபாரம்

ஐந்து விக்கெட் வீழ்த்தி வீரர் வினோத் அபாரம்

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில், ஆறாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. எம்.எம். கிரிக்கெட் கிளப் அணியும், இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. எம்.எம்.கிரிக்கெட் அணியினர், 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு, 231 ரன் எடுத்தனர். வீரர்கள் தாமோதரன், 76 ரன்னும், ராஜா, 34 ரன்னும் எடுத்தனர். எதிரணி வீரர் குணா நான்கு விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய, இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 30.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 119 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் வினோத்குமார் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி