வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ரகுவரனின் முதல்வன் பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
இதை செய்ப்பவர்கள் மாநில அரசு ஊழியர்கள் தானே. பின்னர் தவறு நடந்தால் தேர்தல் ஆணையத்தை ஏன் குறை கூறுகிறது அரை வேக்காட்டு
கோவை: வீட்டை காலி செய்து, வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்த வாக்காளர்களுக்கு, வாக்காளர் படிவங்களை வழங்கக் கூடாது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த விதிமுறையை மீறியதாக, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி அலுவலர்கள் மீது, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி துவங்கி, நடந்து வருகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களும், வீடு வீடாகச் சென்று சம்பந்தப்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து, படிவங்களை வினியோகிக்க வேண்டும். வீட்டை காலி செய்து இடம் பெயர்ந்து, சென்றவர்களுக்கு படிவம் வழங்கக் கூடாது. அவர்களது பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு, புதிய முகவரியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே, தேர்தல் ஆணையத்தின் விதிமுறை . மாநகராட்சி மத்திய மண்டலம் 66வது வார்டுக்கு உட்பட்ட, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தவர்களில் பலரும், வீட்டை காலி செய்து விட்டு, கவுண்டம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம் பெயர்ந்து விட்டனர். தெற்கு தொகுதியில் இருந்து கவுண்டம்பாளையம் தொகுதிக்குள் சென்று விட்டனர். அவர்களது பெயரை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு, கவுண்டம்பாளையத்தில் சேர்க்க வேண்டும். மாறாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரான, மாநகராட்சி பில் கலெக்டர் பிரியதர்ஷினி என்பவர், வாக்காளர்களை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வரவழைத்து, படிவங்களை வினியோகித்திருக்கிறார். பூர்த்தி செய்த படிவங்களை, மாநகராட்சி மத்திய அலுவலகத்துக்கு நேரில் வந்து கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பூர்த்தி செய்த படிவத்தையும், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், வீட்டுக்கு நேரில் சென்றே பெற வேண்டும் என்பது விதிமுறை . இதேபோல், சாயிபாபா காலனியில் 44வது வார்டில் வினியோகித்த படிவங்களை, தன்னுடைய உதவியாளரிடம் திருப்பிக் கொடுக்குமாறு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு, தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை, மாநகராட்சி அலுவலர்கள் மீறி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீட்டில் வசிக்காதவர்களுக்கு படிவம் வழங்கக் கூடாது. ரேஸ்கோர்ஸில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் உள்ள வீடுகளை காலி செய்து சென்றவர்களுக்கு படிவம் வினியோகித்தது தவறு. இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்பதே சரி. சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரணை நடத்தப்படும். - சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி கமிஷனர்
ரகுவரனின் முதல்வன் பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
இதை செய்ப்பவர்கள் மாநில அரசு ஊழியர்கள் தானே. பின்னர் தவறு நடந்தால் தேர்தல் ஆணையத்தை ஏன் குறை கூறுகிறது அரை வேக்காட்டு