நவாவூரில் துவங்கியது விஸ்மயா மழலையர் பள்ளி
கோவை : நவாவூர் பிரிவு, மருதமலை ரோட்டில் உள்ள விஸ்மயா சர்வதேச பள்ளியில், 'விஸ்மயா கிட்ஸோன்' என்ற பெயரில், மழலையர் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.பள்ளியை தி.மு.க.,கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா, நிர்வாகிகள் சண்முகசுந்தரம், சந்தோஷ் மற்றும் வேணுகோபால் ஆகியோர் திறந்து வைத்தனர்.திறமை வாய்ந்த, அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. 'டே கேர்', மழலையர் வகுப்பு உண்டு. யோகா, நடனம், இசை ஆகியவை கற்றுத்தரப்படுகிறது. துாய்மையான மற்றும் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10:1 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தொலைநோக்கு பார்வையுடன் பள்ளி செயல்படுவதாக, பள்ளியின் நிறுவனர்கள் விஜயலட்சுமி மற்றும் சாந்தலட்சுமி தெரிவித்தனர். நிர்வாக இயக்குனர்கள் லதா, ராஜ்குமார் துவக்க நிகழ்வில் பங்கேற்றனர்.