உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளுக்கு இடையே வாலிபால்; வீரர், வீராங்கனைகள் உற்சாகம்

பள்ளிகளுக்கு இடையே வாலிபால்; வீரர், வீராங்கனைகள் உற்சாகம்

கோவை; மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான, 30வது 'சி.எம்.எஸ்., டிராபி' வாலிபால் போட்டி கணபதி சி.எம்.எஸ்., பள்ளியில் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், 25 அணிகளும், மாணவியர் பிரிவில், 16 அணிகளும் பங்கேற்றுள்ளன.'நாக் அவுட்' மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. மாணவர் பிரிவில் நடந்த முதல் போட்டியில், சி.எம்.எஸ்., பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில் கோவைப்புதுார் டி.வி. சேகரன் அணியை வென்றது. இரண்டாம் போட்டியில், ஏ.பி.சி., மெட்ரிக் அணி, 2-1 என்ற செட் கணக்கில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி அணியையும் வென்றது.மாணவியருக்கான போட்டியில், பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் அணியானது, 2-0 என் செட் கணக்கில் எஸ்.வி.ஜி.வி., பள்ளி அணியையும், இரண்டாம் போட்டியில் சி.எம்.எஸ்., அணி, 2-0 என்ற செட் கணக்கில் நிர்மலா பள்ளி அணியையும் வென்றது. இன்று 'லீக்' முறையில் போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை