உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாக்கு வீரன் வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி

 வாக்கு வீரன் வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி

போத்தனுார்: தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவீதம் ஓட்டுப் போட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தோட்டக்கலை- மலை பயிர்கள் துறை சார்பில், விழிப்புணர்வு வாகனமான வாக்கு வீரன் நேற்று தனது பயணத்தை துவக்கியது. வாகனம் மதுக்கரை மார்க்கெட் நாச்சிபாளையம் தக்காளி மார்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயணித்தது. ஓட்டு நமது உரிமை, ஓட்டுப் போடுவது நமது கடமை என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மதுக்கரை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ