உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் பட்டியல் திருத்தம்: அதிகாரிகள் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தம்: அதிகாரிகள் ஆலோசனை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, அனைத்து கட்சி அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுடன், கோவை மாவட்ட வழங்கல் அலுவலரும், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலருமான விஸ்வநாதன் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வீடு வீடாக கணக்கெடுப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் ஆகியவற்றை கையாளும் முறைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் போன்றவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாத் பேசியதாவது:- மேட்டுப்பாளையத்தில் கடந்த 2002ம் ஆண்டே சிறப்பு தீவிர திருத்தம் நடந்துள்ளது. தற்போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 321 பூத்கள் உள்ளது, 39 பூத்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் இருந்தால் மாவட்ட கலெக்டரிடம் மேல் முறையீடு செய்யலாம். 2002ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களில் 41 சதவீதம் பேர், சமீபத்திய வாக்காளர் பட்டியலுடன் ஒத்துபோகிறது. தற்போது தீவிர திருத்த பணியின் போது, வீடு பூட்டி இருந்தால் போன் செய்து பார்ப்பார்கள். 3 முறை விசிட் செய்வார்கள். வீட்டில் இருப்பவர்கள் வெளியூர் சென்றிருந்தால் ஆன்லைனினும் வாக்காளர்களை அணுகலாம். இவ்வாறு அவர் பேசினார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ